25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று (23/6/2016) யாழ்ப்பாணத்தில் மாணவ அமைப்புக்கள், ஆசிரிய சங்கங்கள், இடதுசாரிய கட்சிகள், கலைஞர்கள் புத்திசீவிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதற்க்காக உருவான போராட்ட அமைப்பினர் பரவலாக துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ் நகரத்தில் பொதுச்சந்தை, விற்பனை நிலையங்கள், பஸ் நிலையம் போன்ற பல இடங்களில்  "ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றிருக்கின்றது. இத் துண்டுப் பிரசுரத்தை நாடு பூராவும் விநியோகித்து, மக்களை இன்றைய அரசின் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராட அழைப்பு விடுக்கின்றது இந்த அமைப்பு.