25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கூடிய ஜனநாயக்திற்காக போராடும் அமைப்பினர்," ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.  ஜனநாயக உரிமைகள் சார்பாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இந்த குழுவில்  இடது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது ஜனநாயகம் குறித்து ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வாக்குறுதி வழங்கியிருந்தது. மக்களை நசுக்கும் பல சட்டங்களை விலத்துவது குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. முன்னைய ஆட்சியில் அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் வந்து செயற்பட வாக்குறுதி அளித்திருந்தது. அரசியலில் பல வருடங்களாக ஈடுபட்டு மகிந்த ஆட்சியில் உயிராபத்து காரணமாக புலம்பெயர்ந்த குமார் நாடு திரும்பி அரசியலில் செயற்பட முடியாதவாறு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதுடன், அவரை நாடு கடத்த்தும் நடவடிக்கையில் அரசு இருக்கின்றது. இந்த ஆட்சியின் ஜனநாயகம் குறித்த வாக்குறுதியானது இன்று கேள்விக்குறியாக மாறிவிட்டது. இந்த துண்டுப்பிரசுரம் பரவலாக நாடு முழுவதும் யாழ்ப்பாணம் உட்பட அடுத்து வரும் நாட்களில்  விநியோகம் செய்யப்பட இருக்கின்றது.  இவ்வாறு துமிந்த நாகமுவ அவர்கள் கருத்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து  ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் லினஸ் ஜயதிலக்க, சோசலிஸ்ட் கட்சி பிறேமபாலா, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பலர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தனர்.

ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க போராடும் இந்த அமைப்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம், புதிய பரம்பரை, ஜக்கிய சொசலிச கட்சி, ஜக்கிய தொழிலாளர் சம்மேளனம், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், முன்னிலை சோசலிச கட்சி, பிரக்ரிஸ் ஒன்றியம், ஜனநாயகத்திற்க்கான ஊடக அமைப்பு, இடதுசாரிய கேந்திரம், புரட்சிவாத சோசலிச கேந்திரம், சோசலிச கட்சி,  இலங்கை முற்போக்கு கட்சி, இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், சுயேட்சையானஇலங்கை ஆசிரியர் சங்கம், பரகதி ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் ஆகியன கூட்டாக செயற்படுகின்றன.