30
Sun, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"அமெரிக்காவின் முயற்சி தமிழர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. படுகொலைகள் உச்சமாக நடைபெற்ற காலத்தில், அப்போது நாம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம். அந்த அமைப்பின் வெளிவிவகார குழு உறுப்பினர்களாகவும் இருந்தோம்.

அப்போது நாம் அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்த சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களை மேற்கொண்ட போது எமக்கு திட்டவட்டமாக கூறப்பட்டது என்னவென்றால். நாங்கள் அரசிற்கு ஆணித்தரமாகவும். உறுதியாகவும் எச்சரித்துள்ளோம். அதாவது இரத்தக்களரி நடந்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதை உறுதியாக நம்பலாம் என்றும் எமக்கு கூறப்பட்டது." என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது கூறுவது மக்களின் அழிவுக்கு தாங்களும் பொறுப்பாளிகள் என்பதை இலகுவாக மறைத்தபடி, "அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் நிச்சயமாக மக்கள் இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்கள் நலன் சார்ந்தே அரசியல் இருக்க வேண்டும்"- என்று மக்கள் சக்தி பற்றியும் மக்கள் போராட்டம் பற்றியும் புதிதாக இந்த மக்கள் விரோதிகள் பேசத்தொடங்குவதொன்றும் தமிழ்மக்கள் நலன்பாற்பட்தாக இனியும் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு பாரிய அழிவில் மீண்ட மக்கள் இருக்கப்போவதில்லை.


கூட்டமைப்பு மற்றும் அரசு மீதான இளைய சமுதாயத்தின் அதிருப்தியானது, மாற்றுக்கான தேடலை திசை திருப்புகின்ற இவர்களின் நயவஞ்சகத்தின் பின்னணியானது நுட்பமாய் வெளிக்கிளம்பியுள்ளது.

முரளி 10ஃ03ஃ2012