28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

கெவிலியாமடுவில் முதலில் 40 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. தற்போது 210 குடும்பங்களாக சிங்கள இனவாத அரசு அதிகரித்துள்ளது. மேலும் இது அதிகரிக்கலாம்.

பத்திரிக்கை செய்திகள் பின்வருமாறு:
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் ஹிஸிபுல்லா ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு ஏடக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

 

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்  அங்கு கூறியது வருமாறு கெவிலியாமடுவில் 40 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன, அதன் பின்னர் தற்போது 210 குடும்பங்களாக அதிகரித்துள்ளன, நான் ஆதாரம் இல்லாமல் பேசுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள், என்னிடம் சகல ஆதாரங்களும் உள்ளன, தேவை என்றால் அவற்றை  சமர்ப்பிக்க நான் தயார். இப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்களை மாகாண முதலமைச்சர், மாவட்ட அரச அதிபர், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்  உட்பட சம்பந்தப்பட்ட விவசாயிகள் அடங்கிய குழுவினர் சென்று பார்வையிட வேண்டும்  என்றார்.

இவரின் இக்கோரிக்கையை ஏற்ற சபை அதற்கான சட்ட சடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என தீமானத்தை மேற்கோண்டது.  பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) வும் இதில் கலந்து கொண்டாராம்.---

அரச அருவருடிகளும் ஒட்டுண்ணிகளும் சேர்ந்து எடுத்த தீர்மானமே இந்த சட்ட நடவடிக்கை என்பதை நாம் காணத் தவறக் கூடாது.

இந்தச் செய்தி மிகவும் வேடிக்கையாக உள்ளது. அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை குடியேற்றும் அந்த அரசாங்கத்தில் ஒட்டுண்ணியாக இயங்கும் இந்த கனவான்கள் மேடை போட்டு தீர்மானம் மேற்கொள்வார்கள் அதை நம்பி மக்கள் செயற்படுவார்களாம்.

என்ன செய்வது அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், அதை செயற்படுத்துவதற்கும் அரும் பாடுபடும் இக்கூட்டம், அதற்கு தாம் எதிரானவர்கள் என பாசாங்கு செய்து மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றி வருவதினை நாம் இன்னமும் மறக்காத நிலையில், மீண்டும் ஒரு ஏமாற்று வித்தையை தொடங்கியுள்ளனர்.

சகலகலாவல்ல எமது சர்வாதிகாரி சட்டத்தினை கையிலெடுத்து தனது விருப்புக்கெல்லாம் ஏற்றவாறு வளைத்து நெளிக்கும் இன்றைய நிலையில் இவர்களது இச் சட்டநடவடிக்கை ஒரு பம்மாத்து விளையாட்டே. மேலும் மக்கள் இவற்றிற்கு எதிராக அணிதிரண்டு போராடும் நடவடிக்கையினை மழுங்கடிக்கும் செயற்பாடும் ஆகும்.