25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் பல மாவட்டங்களில் இயற்கை அனர்த்தம் கொண்டதனால் பெருமழையானது வெள்ளப்பெருக்கு, ஆறுகள் கரை மீறுவது, மண்சரிவு, மனித தொடர்புகள் துண்டிப்பு, பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்படல், குடிமனைகள் வெள்ளத்தில் மூழ்கிப்போவது என பல வழிகளில் சூறையாடி வருகின்றது. 

இனம், மதம், சாதி, வர்க்கம்.. என்று எல்லா அடையாளங்களையும் கடந்த, மனித அவலம் இது.

ஏழை எளிய மக்கள் துணையின்றி, துயரத்தைச் சுமக்கின்றனர். பல உயிர்கள் இழக்கப்பட்டு இன்னும் பலபேர் காணாமல் போயுள்ளனர். 

இலட்சக்கணக்கான மக்கள் அடிப்படை வாழ்வாதாரங்களான உணவு, குடிநீர், குடியிருப்பு, பொருள், துணிமணிகள், தோட்டம் துரவுகள், பயிர்கள், கால்நடைகள் என எல்லாம் இழந்து பரிதவிக்கின்றனர். பெரும் வெள்ளத்தில் மூழ்கி நிற்கின்றனர். இந்த மனிதர்களுக்கு ஒரு நேர உணவுக்கு தன்னும் உதவ முன்வருவது, எங்கள் அனைவரினதும் மனிதக் கடமை. உதவ விரும்புகின்றவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

29/05/2017