25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது 3வது மாநாட்டினை பரிஸின் புறநகர் பகுதியில் கடந்த 29.04.201 சனியன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ள செய்தியினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம். மாநாட்டினை அடுத்து 30.04.2017 ஞாயிறு அன்று அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் பரிஸ் கம்பெற்றா (Theatre de Menilmontant, Gambetta) பகுதியில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் 3வது மாநாட்டு தீர்மானங்களை விஜயன் வாசித்தார். அதனை தொடர்ந்து தோழர் மார்க் அவர்களின் தலைமையில் “ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் அகமுரண்பாடான சாதியமும் - அதன் இன்றைய பரிமாணமும்” கருத்துரை இடம்பெற்றது. கருத்துரைகளை தேவதாஸ் மற்றும் இரயாகரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இதனை அடுத்து கலாநிதி தலைமையில் இடம்பெற்ற “ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியமும் சமவுரிமை இயக்கமும்” கருத்துரையில் நியூட்டன் மற்றும் குமார் குணரத்தினம் இருவரும் கருத்துரை வழங்கினர்.

இறுதி நிகழ்வாக பத்மபிரபா தலைமையில் இடம்பெற்ற “இலங்கையில் வர்க்க போராட்டமும் வர்க்க கட்சியும்” கருத்துரையில் அந்தோணிப்பிள்ளை மற்றும் சிறிகரன் இருவரும் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.

ஓவ்வொரு கருத்துரையின் இறுதியிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

குறிப்பு: மாநாட்டின் அறிவித்தலாக, ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமை நாளில் அடக்குமுறைகள் மற்றும் ஒடுக்கமுறைகளிற்கு எதிராக போராடி மடிந்த போராளிகள், பொதுமக்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூரும் ஒரு பொது நாளாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இனி வருகின்ற ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் நாளில் நினைவு கூரும் நிகழ்வுகளை புதிய ஜனநாயக முன்னணி பரந்த பொதுத்தளத்தில் முன்னெடுக்கும்.