25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது நேசத்துக்குரிய தோழன் M.C. லோகநாதன், இன்று செவ்வாய் கிழமை  18.02.2015, யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். முப்பது வருடங்களுக்கு மேலாக சமூக - மற்றும் தேசிய விடுதலைக்காக போராடிய போராளியை எமது சமூகம், தேசம் இழந்து விட்டது. 

சில நாட்களுக்கு முன்பு கூட   அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாட்டின் பல பாகங்களிலும் நடந்த போராட்டங்களை, வடபகுதியிலும் முன்னெடுக்கும் பணியை சக தோழர்களுடன் இணைந்து நிறைவேற்றியவர் தோழர்.M.C. லோகநாதன்.

இவ் இழப்பானது   தோழரின் குடும்பத்துக்கு  ஈடு செய்ய முடியாததொன்று. இத் துயரில், நாமும் தோழரின் குடும்பத்துடன் பங்கு கொள்கிறோம். 

மேலதிக விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.