25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈராக்கிய சுன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் பெண்ணுறுப்பைச் சிதைக்க கோரியுள்ளதாக ஐ.நாவின் செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. இது மதங்கள் ஆணாதிக்கமானவை என்பதையும், பெண்களுக்குரியனவல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

மதத்திடம் ஜனநாயக தன்மையோ, சுதந்திர தன்மையோ கடுகளவும் கிடையாது என்பதுடன், அதன் காட்டுமிராண்டித்தனத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது.

இயற்கை இனவிருத்தியை சார்ந்து துண்டும் மகிழ்சியை ஆண் மட்டும் அனுப்பவிக்கவும் பெண்ணுக்கு மறுக்கும் மத வரட்சியைத் தவிர, மனிதத் தன்மை எதையும் காணமுடியாது.

ஆண்களின் தம்மளவிலான ஒழுக்கமற்ற வாழ்க்கையே, பெண் உடல் உறுப்பை சிதைக்கும் வன்முறையாகின்றது. மதம் சார்ந்து இதைக் கோரும் ஆணாதிக்க சமூகம், பெண்ணை நம்ப மறுக்கின்ற அளவுக்கு அற்பதனமாகவும், இழிவானதாகவும் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.