25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற அரசியல் தீர்வைப் பெற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். அவரிடம் இரண்டு கேள்விகள்.

1.தமிழ் மக்கள் என்றால் யார்? யாழ்ப்பாணத்தானா! அங்கு வாழும் வெள்ளாளனா!! தமிழ் மக்கள் என்ற முகமூடிக்குள் சாதியமும், பிரதேசவாதமும், இனவாதமும், ஆணாதிக்கமும், சுரண்டும் வர்க்கமும் தான் கோலோச்சி இருக்கின்றதே ஒழிய, உழைக்கும் தமிழ் மக்களை முன்னிறுத்தியதல்ல. அனைத்து ஒடுக்குமுறையையும் தனக்குள் களைந்து, தமிழ் மக்களை ஒன்றிணைக்க மறுக்கும் பித்தலாட்டமல்லவா இது.

2.தீர்வை பெறுவதற்கான என்ன செயல்திட்டத்தை கொண்டு இருக்கின்றனர். உணர்ச்சிவசப்படுத்திய இரத்தத்திலகம் பெற்று குருட்டுப் போராட்டத்தை வழிநடத்திய, பாரியளவில் மக்களை அழிக்க காரணமான அதே தொப்பியை, மீண்டும் போட்டுக் காட்ட முற்படுகின்றனர். தமிழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டி சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து, இனவாதிகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வக்கற்ற குறுந்தேசிய இனவாதக் கும்பல் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

இல்லையென்றால் யாராவது பதில் சொல்லுங்கள்.