25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் புத்தூர் மற்றும் சுல்லியாவில் வாழ்ந்து வரும் 926 இலங்கை அகதி குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாம்!

இப்படி இலங்கை அகதிக்கு சாதி அடையாளம் கொடுக்கும் இந்திய அரசு தான் இலங்கையில் இன வேறுபாட்டை நீக்கி நல்லாட்சியை அமைக்க உதவுமென்று கூறி, மக்களை கனவுலகில் வாழக் கோருகின்றது தமிழ் இனவாதம்.

இந்த மோடி – ஜெயலலிதா வை ஆதரித்தே, வைகோ போன்ற இனவாதிகள் தமிழனுக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்ற குடுகுடுப்பைக்காரன் போன்று ஆரூடம் சொன்னவர்கள்.
இன்று தமிழனுக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்து, அகதியை அகதியுடன் மோதவைக்கின்ற வக்கிரத்தைத்தான் தமிழனுக்கு திணித்து இருக்கின்றனர்.

இந்தியப் பிரஜைகள் அல்லாதவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது என 1994ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட, குப்பைத்தொட்டியில் போட்டுள்ளது மோடியின் இந்துத்துவ சாதிய அரசு.