25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பீரிஸ்- சுஸ்மா சந்திப்பு அதிர்ச்சி தருவதாக கூறி, மோடிக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளாராம். இந்த அரசியல் மோசடி தான் அதிர்ச்சியளிக்கின்றது.

இதேபோன்று 2009 மே மாதம் இந்திய தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வென்று புலியை பாதுகாக்கும் என்று கூறி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை பலி கொண்ட சதிக்கு வைகோ தலைமை தாங்கிய உண்மை தான், அதிர்ச்சி அளிக்கின்றது.

ஒரே நாடகத்தை, இனவாத முகமுடியின் கிPழ் போடுவதனையும், பிழைப்பதனையும் தொடர்ந்து அரங்கேற்றுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

இந்து அடிப்படைவாதியான ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான மோடியின் கொள்கையை ஆதரித்த வைகோ, தன் சொந்த செயலை மூடிமறைக்கும் போக்கிரித்தனத்தை அரங்கேற்ற முனைகின்றார்.  இங்கு அதிர்ச்சி அளிப்பது மோடியின் கொள்கை அல்ல. மோடியின் கொள்கை மற்றும் நிலை ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். மற்றவனை முட்டாளாகக் கருதுவதே இங்கு அதிர்ச்சி அளிக்கின்றது.