25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடமாகாண ஆளுநராக G.A.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கூற்று, தொடர்ந்து கனவுலகில் மிதப்பதைக் காட்டுகின்றது. அரசு பற்றிய மாயைக்குள், இணக்கமாக அதிகாரத்தை அடையக் காத்திருந்திருக்கும், தமிழ் மக்களின் தலைமைகளே தாங்கள் என்பதை தங்கள் இவ் எதிர்வினை மூலம் எடுத்துக்காட்டி இருக்கின்றது.

அதிகாரத்தை நக்கிச் சுவைக்க காத்திருந்த கூட்டமைப்பின் மூக்கு உடைந்து போனது. மக்களை வேறு போராட்ட வழியில் அழைத்துச் செல்ல வக்கற்றவர்களாக்கியுள்ளது.

மறுபக்கத்தில் மகிந்த அரசு இராணுவ பாசிச அரசாக நீடிக்க முடியும் என்ற உண்மையை, இது அம்பலமாக்கி இருக்கின்றது.

இனி சிவில் சட்ட தேர்தல் ஜனநாயக வடிவங்களுக்கு இடமில்லை என்பதையும், இதில் நம்பிக்கை கொள்வதை விட மாற்றுப் போராட்ட வடிவங்கள் தேவை என்பதையுமே உணர்த்தி நிற்கின்றது.