25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM

இடம்: RKV ஸ்டுடியோஸ், வடபழனி (விஜயா மருத்துவமனை எதிரில்)

நண்பர்களே, பிரசன்னா விதானகேவின் With you without you திரைப்படம் நாளை மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்படவிருக்கிறது. விஜயா மருத்துவனைக்கு எதிரில் அல்லது வடபழனி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இந்த RKV ஸ்டுடியோ உள்ளது. மிக குறுகிய காலத்தில், இந்த திரையிடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே நண்பர்கள், எல்லாரும் இந்த நிலைத்தகவலை, சேர் (Share) செய்து, திரையிடலை வெற்றிகரமாக நடத்த உதவ வேண்டும். தமிழ் திரைப்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள், உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் இந்த திரையிடலில் கலந்துக்கொள்ளவிருகிரார்கள். தமிழ் தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள், பத்திரிகை நண்பர்கள் அனைவரையும் இந்த திரையிடலுக்கு அன்போடு அழைக்கிறேன். திரைப்படம் முடிந்ததும், இயக்குனர் பிரசன்னா விதானகேவுடன் விவாதமும் நடைபெறவிருக்கிறது.

நண்பர்கள் எப்போதும் என்னிடம் எது நல்ல படம், உங்களுக்கு எது சிறந்தப் படம் என்கிற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்போது சொல்கிறேன், சமீப ஆண்டுகளில் நான் பார்த்ததில், இது மிக சிறந்த படம், ஏன் என்பதை நீங்களே நாளை திரையிடலுக்கு வந்து தெரிந்துக்கொள்ளுங்கள். RKV ஸ்டுடியோ மிக பெரிய திரையரங்கு, எனவே எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இந்த திரையிடலில் பங்கேற்கலாம். ஒரு நல்ல திரைப்படத்தை, எல்லாரையும் பார்க்க வைக்கும் பொறுப்பு, திரைப்படத்தை நேசிக்கும் எல்லாருக்கும் இருக்கிறது. எல்லாரு சேர்ந்து இந்த திரையிடலை வெற்றிபெற செய்வோம். நண்பர்கள் அனைவரையும் மீண்டும் அன்போடு இந்த திரையிடலுக்கு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள். பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்திற்கு இடையே இந்த திரையிடலை தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்கிறது. எனவே, இந்த திரையிடலுக்கு நன்கொடை கொடுக்க விரும்பும் உடனே கொடுத்து உதவ வேண்டும். 15,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. எனவே நண்பர்கள் நன்கொடை கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

திரையிடலுக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக, நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.

தமிழ் ஸ்டுடியோ அருண்

தொடர்புக்கு: 9840698236

நன்றி : அருண்