25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009 இற்குப் பின்னர், இலங்கையின் நடந்த தமிழ் மக்கள் மீதான கொடுமைகளை, பாலியல் வதைகளை நியாயமான முறையில் பேச முற்படும் ஒரே திரைப்படம், "பிறகு" என்ற சிங்கள - தமிழ் திரைப்படமாகும். இதில் நடித்த நடிகர்கள் தொடக்கம், இயக்குனர் மற்றும் பணியாளார்கள் தமிழ் மக்களுக்காக நியாயம் கேட்பவர்கள். எமது உரிமைப் போரை ஆதரிபவர்கள். இதன் அடிப்படையில் தான், சமவுரிமை இயக்கம் மற்றும் சகோதர அமைப்புகள் இணைந்து இந்த திரைப்படத்தை உலகில் பல நாடுகளில் வெளியிட்டு வருகிறது .

இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி காட்சி படுத்தும் முயற்சியைத் தடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டோர், மேற்படி இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், திரையிடலையும் ஆதரிக்க வேண்டும்.