25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் இன்று (10 ஜூன் 2014) மாபெரும் நடைப்பயணம் மற்றும் பேரணியும் ஆரம்பமாகியது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சாமான்ய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் இந்த நடைப்பயணமானது இன்று (10.06.2014) பிற்பகல் 3 மணியளவில் கொழும்பிலுள்ள ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட பேரணியுடனும், போராட்ட முழக்கங்களுடனும் ஆரம்பமாகியது. ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட ஆரம்ப நிகழவில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், உழைப்பாளர் சங்கங்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். உரைகள் இரு மொழிகளிலும் அமைந்துடன், போராட்ட கோசங்கள் மும்மொழிகளிலும் முழக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதைகளைத் தாங்கிய வண்ணம் பல்லாயிரம் மாணவர்களும், உழைப்பாளர்களும், தலைவர்களும் நடைபயணத்தின் ஆரம்பத்தில் இணைந்து கொண்டனர்.

நடைப்பயணம் மற்றும் பேரணியில் எழுப்பப்படும் கோசங்கள்:

* சுதந்திரக் கல்வியையும், கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுக்க ஓரணி திரள்வோம்!

* மாணவர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து!

* கல்வி உரிமையாகும், விற்பனைப்பொருள் அல்ல!

* மஹாபொல புலமைப்பரிசில் தொகையை ரூபா 5000 வரை உயர்த்து!

* பாடசாலைக் கல்விக்கு பணம் அறவிடுவதை நிறுத்து!

* மாலம்பேயில் உள்ள கொள்ளையிடும் கல்விக் கடையை இழுத்து மூடு!

* நீர், விதை, நிலம், விவசாயம் போன்றவற்றில் நடைபெறும் கொள்ளைகளுக்கு எதிராக குரலெழுப்புவோம்!

* மீனவர்களுக்கு ஏமாற்றிய எரிபொருள் மானியத்தை உடனடியாகப் பெற்றுக்கொடு!

* சுற்றுலா வியாபாரத்திற்காக கரையோர பிரதேசங்களை கொள்ளையடிப்பதனையும், மீனவ தொழிலுக்கு அநீதியிழைப்பதையும் உடனடியாக நிறுத்து!

* சரணடைவதை விட சூறையாடுபவர்களுக்கு எதிராகப் போராடுவதே மேல்!

{jcomments on}