25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் ஜூன் 10 ஆம் திகதியன்று மாபெரும் நடை பயணம் மற்றும் பேரணி ஆனது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சாமான்ய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டமானது நடத்தப்படும் எனவும் ஜூன் 10 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பிலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த பாரிய நடைபயணம் மற்றும் பேரணிக்கு மக்களது ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் நஜித் இந்திக அவர்கள் எம்மிடம் தெரிவித்தார். கடந்த 3 ஆம் திகதி மாணவர்களும் மற்றும் மக்கள் நலன்சார்ந்த வெகுஜன அமைப்புக்களும் இணைந்து இலங்கை முழுவதும் மக்களை தெளிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.