25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்தும், இணைந்த சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடங்களாக குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் இணைந்த சுகாதார கல்விபீட மாணவர்கள் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (16.05.20014) முற்பகல் நடாத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட வேளையில் நான்கு மாணவ தலைவர்கள், இலங்கை அரசபாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பேராதனை - கண்டிப் பல்கலைக்கழகமாணவர்கள், ஒருவர் றுஹுனுப் பல்கலைக் கழக மாணவராவார்.

கைது செய்யப்பட்ட மாணவ தலைவர்களில் விபரம் வருமாறு :

1. சுகாதார கல்விபீட மாணவர்கள் சங்கதலைவர் Prasad Nandasena - பேராதனை பல்கலைக்கழகம்

2. பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் Dimuthu Gunasekara

3. பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார கல்விப்பீட மாணவர்கள் சங்க உபதலைவர் Pasan Hewawitharana

4. றுகுனுப் பல்கலைக்கழக சுகாதார கல்விப்பீட மாணவர்கள் சங்கதலைவர் Suresh Madusanka

கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராட்டம் நடாத்தியதர்காக, கொழும்பு நீதி மன்றத்தால் 19.05.2014 அன்று மன்றில் சரணடயுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட 17 பேரில், கைது செய்யப்பட்ட மூவர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்த மூவரும் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். றுகுனுப் பல்கலைக்கழக சுகாதார கல்விப்பீட மாணவர்கள் சங்கதலைவர் Suresh Madusanka விற்கு எந்தவித அழைப்பாணையும் நீதி மன்றத்தால் விடப்பட்டவில்லை. ஆனாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின் இன்று இரவு (16.05) கொழும்பின் கொம்பனித் தெருப்பிரதேசத்தில் தங்கியிருந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நான்கு மாணவர் தலைவர்களும் கிருலப்பனை போலீஸ் நிலைய தடுப்புக் காவலில் உள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் தகவலில்படி மேற்படி நால்வரும் பொலிசாரினால் அடித்துச் சித்திரவதை செய்யப்படுள்ளதாக தெரியவருகிறது. 

இன்று நடைபெற்ற கைதுகளானது எந்த விதமான இலங்கைச் சட்டதிட்டங்களுக்கும் உட்பாடாத வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் நடாத்தப்பட்ட போராட்டம், இலங்கையின் ஆதிக்க வர்க்கத்தாலும் - அதன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபஷ்வாலும் தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. மாணவர் போராட்டங்கள் வெகுசன மக்கள் கிளர்சியைத் தோற்றுவிக்கலாம் எனப்பயப்படும் இலங்கை அரச ஆதிக்கவாதிகள், அப்படியானதோர் நிலைவராதடி போராட்டங்களை வேருடன் அழிக்கும் வேலைத் தொடங்கியுள்ளனர். அதன் ஆரம்பம் தான் இன்றைய சட்டத்துக்கு முரணான கைதுகளாகும்.

இதேவேளை அரச ஒடுக்குமுறைக்கு எதிராக நடாத்தப்படும் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் 160 நாட்களைக் கடந்தும் நடைபெறுகிறது. கைதுகளும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்தால் தமது போராட்டம் வேறு வேறு வழிகளில் தொடருமென மாணவர்கள் கூறுகின்றனர் .