25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, அலரி மாளிகைக்கு முன்னாள் கடந்த 7ம் திகதி மறியல் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (ICUF) மாணவர்கள் கொழும்பில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உலக இளைஞர் காங்கிரஸ் முடிந்ததும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் பல்கலை கழக நிர்வாகங்கள் இடமிருந்து பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை கோரியுள்ளதாகவும் மாணவர்களை இந்த வெகுஜன கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்ற கட்டாயப்படுத்திய மாணவர்களை மட்டுமே கைது செய்ய உள்ளதாகவும் கூறினார். மேலும் பொலிஸ் ஊடக நிறுவனங்கள் இருந்து வீடியோ பதிவுகளை கோரியுள்ளதாகவும் மற்றும் பொலிஸ் மாணவர்கள் அடையாளம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.