25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசோ "பயங்கரவாதிகள்" என்று பெயரில் ஒரு பெயர் பட்டியலையும், அமைப்புகளுக்கு தடைகளையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம் இன்ரபோல் மூலம், கணிசமானோருக்கு சர்வதேச பிடிவிராந்துகளையும் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையினர் "போர்க் குற்றவாளிகள்" என்று அடையாளப்படுத்திய ராணுவத்தினரின் படங்களையும், அவர்கள் குடும்பப் படங்களையும் வெளியிட்டு இருக்கின்றது.

அரசு சிங்கள இனவாதிகளை திருத்தி செய்து ஏமாற்றவும், சர்வதேச விசாரணை நாடகத்தை முறியடிக்கவும் இந்த இனவாதக் கேலிக் கூத்தைச் செய்கின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையினர் குடும்பப்படங்களை வெளியிட்டதன் மூலம், பெருமை பேசும் தமிழினவாதத்தை உசுப்பிவிட முனைந்துள்ளது. அதே நேரம் தாமைத்தாமே மனித விரோதிகள் என்பதையே, மீண்டும் ஒருமுறை உலகளவில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையினர் குடும்பப்படங்களை வெளியிட்டதன் மூலம், உண்மையான போர்க் குற்றவாளிகளை இதன் மூலம் தப்பிக்கவே மறைமுகமாக உதவி செய்துள்ளனர். அரசு எப்படி உலகளவில் சட்டப்படியான அமைப்புகளை அந்த நாட்டு நீதிமன்றங்கள் மூலம் தடை செய்யாது, சட்டவிரோமாக தடைசெய்தன் மூலம் தனது மக்கள் விரோத ஆட்சி முறையை உலகளவில் தனிமைப்படுத்திக் கொண்டதோ, அதையொத்த செயல் தான் பிரித்தானிய தமிழர் பேரவையினரின் இந்தச் செயற்பாடும். இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, தொடர்ச்சியான இனவாதச் செயற்பாடாகும். சிங்கள, தமிழ் மக்களை முட்டாளாக்க முனையும், கேலிக்குரிய இனவாத அரசியல் நடத்ததைகளாகும்.