25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி பிரதமரான ஆறு மாதங்களில் பல விதங்களில் நமக்கு தொந்தரவு செய்து வரும் பாகிஸ்தான் அழியும் என மகாராஷ்டிராவில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடம் கூறியுள்ளார்.!

நரேந்திர மோடியின் ராஜ்ஜியத்தில் மோடியை எதிர்த்தவர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என இந்துத்துவா பாசிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!.

ஆட்சிக்கு வருமுன்பே இப்படியான இந்துவக் கூப்பாடென்றால், வந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா? இதனை எதிர்க்கட்சிகள் கர்ணகடுரமாக எதிர்க்க மோடி சமதர்ம மகுடி வாசிக்கின்றார். நான் பிரதமரானால் இந்த நாட்டின் எந்தவொரு விஷயமானாலும் அனைத்தும் இந்த நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் போய்ச்சேர வேண்டும்! அதிலும் குறிப்பாக "எம் முஸ்லிம் சகோதரர்களுக்கும் சென்றடைய வேண்டும்" என்கின்றார். இத்துடன் முஸ்லிம் மக்களை என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்கள், ரத்தத்தின் ரத்தங்கள் என்றிருக்கலாமே..! தேர்தலில் காலத்தில் சோழியன் குடும்பி சும்மா ஆடுமா?