25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராஜீவ் காந்தியின் மூவர் வழக்கு தீர்வில்லா தீர்ப்புகளுடன் தொடர்கின்றது. "அரசியல் சாசன பெஞ்செனச்" சொல்லி, உங்களுக்கு நடப்பில் உள்ள தொடர் தண்டனைதான் எங்கள் தீர்ப்பென…. உச்ச நீதிமன்றம் ஓர் அதியுயர் நவீன தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. உலக அரசியல் அரங்கில் ராஜீவ் கொலை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் உலக வரலாற்றில் குற்றவாளிகளுக்கு இதுபோன்றதொரு கேவலமான இழுத்தடிப்புத் தண்டனை வழங்கப்படவில்லை எனலாம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மலட்டுத்தனம் கொண்ட பல உள்ளடக்கங்களையும, கைகொட்டிச் சிரிக்கும் பல வேடிக்கைத்தன சட்ட உருவாக்கங்களையும்தான் தன்னகத்தே கொண்டுள்ளது. கையாலாகாத்தனம் கொண்ட சட்டச் சிக்கல்களால் உயர்நீதிமன்ற நீதிபதிகளே சுயம் கொண்ட தீர்ப்புக்களை வழங்க முடியாமல் தத்தளிகின்றனர். மாநில அரசிற்கு அதிகாரம் உண்டென வழங்கப்பட்ட தீர்ப்பால் நம்பிக்கை கொண்ட கருணைக் கைதிகளின் வாழ்வில் மண் அள்ளிப்போட்ட "முடிவினைதான்" அவர்களுக்கு முடிவாகியுள்ளது.

ஜனாதிபதியால் கவர்னரால் அல்லது உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்படும் மரண தண்டனை கைதிகளை தன் விடுதலை அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு உண்டா?

குற்றவியல் நடைமுறை சட்டம் 432 இன் படி மத்திய அரசுடன் கலந்தாலோசனை என்பதன் அர்த்தம் என்ன?

தண்டனை குறைப்பை நீதிமன்றம் செய்யும் போது அதை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணையாக விடுதலை அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா?

யாருக்கு இதில் அதிகாரம் இருக்கிறது.?

இந்திய-அரசியல் சட்டதிற்கே அல்வாக் கொடுத்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வாழும் குற்றவாளிகள் இந்தியாவில் ஏராளம் பேர்கள் உண்டு. அதிலும் ராஜீவ் கொலையில் சமபந்தப்பட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத ஏராளம் குற்றவாளிகளும் உண்டு. பலர் நாம் சாட்சிகளாகின்றோம் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துங்கள் என சவால் விடுகின்றனர். இதை சோனியா குடும்பம் உட்பட்ட காங்கிரஸின் அரசு கண்டுகொள்ளமல், கடந்த காலங்களில் கள்ள மௌனம் சாதித்தே வந்துள்ளது. இவ்வழக்கில் உண்மை விசாரணை நடைபெற்றால், தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சுற்றவாளிகள் ஆவார்கள். கணவனை இழந்த சோனியாவிற்கு நேர்மையான விசாரணை தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் கருணை மனு வழங்கப்பட்ட மனுதாரர்களுக்கு வீடுதலை தேவை.

மகனின் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவேன் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று அளித்த கூறியுள்ளார். இன்றைய தீர்ப்பு எனக்கு பெரும் மன வேதனை அளிக்கிறது. இன்னும் 2 நாட்களில் விடுதலை ஆவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். அவனை எப்படி வரவேற்பது என்று கனவு கண்டிருந்தேன். ஆனால் இன்றைய உத்தரவு கேள்விப்பட்டு 23 ஆண்டு காலம் போராடியாச்சு இன்னும் போராட வேண்டியுள்ளதென. அற்புதம்மாள் அழுதபடி கூறினார்.! இவ் ஏழைத்தாயின் கண்ணீரை சட்டம் பற்றி ஆராயவிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின்; மூடர் கூட்டம் கண்டு கொள்ளுமா?