25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை என சர்ச்சைக்குரிய முஸ்லிம் குடியேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் வை.எம்.எஹியான்

'முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர், இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் குடியேறினர். தொடர்ந்தும் புத்தளத்தில் அகதி வாழ்க்கை வாழ விரும்பாமையாலேயே தமது சொந்த இடங்களை சுத்தம் செய்து, அங்கு தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.

வில்பத்து காடு என்று பிரசாரப்படுத்தப்படும் குறித்த பகுதி முசலி பிரதேசசபைக்குட்பட்ட மரைக்கார்தீவு கிராமமாகும். இங்கு முஸ்லிம் மக்களின் மையவாடி (வெற்றுடல்கள் புகைக்குமிடம்) பள்ளிவாசல் கிணறு என்பன இன்னமும் பழுதடைந்த நிலையில் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இப்படி இருக்கும்போது தமது சொந்த இடத்தில் குடியேறுபவர்களைப் பார்த்து – காட்டுக்குள் குடியேறுகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது.

முசலி பிரதேச சபையின் தலைவருக்கு வந்த துணிவு முஸ்லிம் அமைச்சர்களுக்கு வரவில்லையே? அவர்கள் இப்பவும் அரச பாதார விந்தங்களையே நம்புகின்றனர். இது தவிர மகிந்தரும்-பசிலரும் ஒருவாரத் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து பொதுபல சேனாவிற்கு எதிராக கொதிப்பதுபோல் காட்டுகின்றார்கள்?..... பொதுபல சேன அமைப்பிற்கு எதிராக விஜித தேரரின் நடவடிக்கைகளுக்கு தன் ஆதரவு உண்டென அண்ணனும், நான் பொதுபல சேனாவிற்கு பயப்படமாட்டேன் என தம்பியும், சினிமா காட்டுகின்றார்கள். "மே தினத்தில் பச்சோந்திகளும் சிவப்பாவார்கள்" என்பது போல் இப் பஞ்சோந்திகளும் பொதுபல சேனாவிற்கு எதிரான சண்டியர்கள் ஆகின்றார்கள்.