25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமவுரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்கமாக "மலரும்பூக்கள்" என்ற அமைப்பின் உதவியும் அதன் செயற்பாடு முறைபற்றியும் விபரிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வுதவிப்பணி கிடைக்கும் பிள்ளைகள் Skype மூலம் இவ்வுதவியின் பயன்பற்றியும் அதற்கான நன்றியையும் தெரிவித்தனர். அப்பணிகளுக்கு பொறுப்பாக நாட்டில் இருந்து ஒழுங்கமைப்போர் மேலதிக விளக்கங்களையும் இப்பணியின் அவசியம் பற்றியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வு பற்றி பங்கேற்றவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்ட போது, அவர்கள் இது 'நல்லதொரு தொடக்கமாகவும் மகிழ்சியாக இருப்பதாகவும் கூறினார்கள். ஒரு மாணவனும் இவ்வாறான கருத்தையே கூறினான்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான தெடர்பாடல் மொழியறிவிற்கான செயற்பாட்டுத் திட்டங்களையும், அதற்கான கட்டாயமான நடைமுறை விதிகளையும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் புறக்கணித்ததால், இருமொழியையும் பேசக்டியவர்கள் ஒருசிலரே இருந்தனர். ஆனாலும் கலந்து கொண்டவர்களிடம் தொடர்பு மொழியாக டொச் மொழியே முக்கிய பங்காற்றியது. அரசியல், சமூகம், கலாச்சாரம், சுகநலம் போன்ற விடயங்கள் பற்றிப்பேசிக்கொண்டனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக பாடல்களுடன் ஆடிப்பாடி இடம்பெற்றது. இவ்வாறான நிகழ்வில் சிந்தனைக்கும் விழிப்புணர்வுக்குமான நிகழ்சிகள் இடம் பெறாமையை நோக்கி புதிய கலாச்சாரத்திற்கான கட்டுமானத்தை கோரும் நிகழ்வுகளின் அவசியம் எம்மால் உணரப்பட்டது. ஏவ்வாறாயினும் தமிழ், சிங்கள மக்கள் ஒன்றாக அமர்ந்து உரையாடி, உணவருந்தி, இசையைரசித்தது. புதியகலாச்சாரத்தின் அடிக்கல் எனலாம்.

நேரடித் தொகுப்பு: திலக்