25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாய் பேசா நகைச்சுவை நடிப்பால் உலக அரசியல் அதிகார வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சார்லி சாப்பிளின். The Great Dictatorபடத்தில் சாப்ளின் இறுதியில் பேசும் வசனங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் ஆகும்.

"மிக அதிகம் சிந்திக்கிறோம், மிகச் சிறிதே உணர்கிறோம்.

இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.

கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை

இரக்கமும், மென்மையும்.

இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்

யாவும் இழக்கப்பட்டுவிடும்".!

"எல்லாருக்கும் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் உலகாகும் அது. இளையவருக்கு எதிர்காலமும், மூத்தோருக்கு பாதுகாப்பும் தரும் உலகை உருவாக்குவோம் என்று சொல்லித்தான் சர்வாதிகாரிகள் எழுகிறார்கள். அப்படி ஒன்று நடப்பதே இல்லை. பெரும் பொய் அது, அது அவர்களால் நடக்காது. ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்று சேர்வோம். புத்தம் புது உலகை படைப்போம்"

"ஹான்னா! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு, பேராசை, மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்""

இப்பேர்ப்பட்ட அரும்பெரும் புரட்சிக் கலைஞர்களை உருவாக்குவதே எம்சமகாலக் கடமையாக வேண்டும். இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் சரியான நினைவு கூரலாகும்!

_