25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழர் பிரதேசத் தமிழர்கள் இனி ஒரு போதும் தங்களை சுத்தமான தமிழர்கள் என கூற முடியாதாம். ஏனெனில்…. எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அனைத்துத் தமிழர்களிடம் (இரத்தம் கொடுப்பதால்) ஓடுகின்றதென  வடபகுதி "இராணுவப்பிரிவின் உயர்தர வாலில்லா வானரம்" ஒன்று இப்படியொரு இனவெறிக உளவியல் கருத்தியலை இட்டுக்கட்டுகின்றது.

இப்பேர்ப்பட்ட வானரங்களிடம்… "தமிழர் பிரதேசங்களில் உள்ள உணவு வகைகளை எல்லாம் உண்பதனால் தமிழர் பகுதி ராணுவத்தினரின் உடம்பில் ஓடுவதெல்லாம் தமிழ் இரத்தம் தானே? எனும் கருத்தியல் கொண்டொரு கேள்வியைக் கேட்டால்?.... இம்மூடங்களின் பதில் என்னவாக இருக்கும்? பொறுங்கள் இப்படிச் சொல்லித்தந்த மகிந்த-கோத்தபாய விமல்-வீரவன்ச உளவியலாளர்களிடம் கேட்டுச் சொல்கின்றோம் என்பார்கள். இப்பேர்ப்பட்ட இனவாத வானரங்களை இல்லாதாக்கின் நாட்டில் இனவாதங்கள் இல்லாதாக்கப்படும். மக்கள் அமைதி வாழ்வு வாழ்வர்.