25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்! மிதவாத கொள்கைகளைப் பின்பற்றும் தமிழர்களையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதனால் நன்மைகள் ஏற்படப் போவதில்லை! உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சுமூக உறவுகளைப் பேண வெளிவிவகார அமைச்சு முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவர் போன்று ஏனைய சமூகப் பொறுப்புமிகு சக்திகளும், எல்லா இனவாதங்களையும் வெறுக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களும் தமிழ் மக்கள் பிரச்சினைகளின் உண்மைகளை அறியாத சிங்கள மக்களிடம் துணிந்து எடுத்துச் சென்றால், அரசின் முட்டாள்தன முடிவுகள் தகர்க்கப்படும். பிரிவினைவாத சக்திகளின் மீள் உருவாக்கமும் இல்லாதாகிவிடும். அரசு தீர்வையோ, உண்மைகளையோ கண்டறிய முற்படாது. மேற்கண்ட பொறுப்புமிகு சக்திகளால் முடியும்.