25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள்  மக்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.

வியாழனன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் கடற்படை வீரரொருவரை உள்ளுர் மக்கள் மடக்கிப் பிடித்ததாகவும், அந்த தகவலறிந்து முகாமிலிருந்து அங்கு விரைந்து வந்த கடற்படையினரால் குறிப்பிட்ட படை வீரர் மீட்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்தே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைது ஏற்பட்டதாகவும் அறியவருகின்றது

மக்கள் செரிந்து வாழும் பகுதியிலுள்ள குறித்த கடற்படை முகாமினால் மக்களின் இயல்பு நிலைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறும் அட்டாளைச்சேனை பிரதேச உள்ளுராட்சி சபை தலைவரான எம். ஏ. அன்சில், அந்த முகாம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கை முப்படைகளும் இனவெறி கொண்ட படையாக அரசால் திட்டமிட்டு வளர்க்கப்படுவதும் அவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டும் காணாமல் ஊக்கவித்தும் வருகின்றது.

இந்த மக்களின் ஓட்டுக்களைப் பெற்று பாராளுமன்றம் சென்ற அரசியல் தலைவர்களும் பிரதிநிதிகளும் தமது பதவி சுகங்களிற்க்காக அரசின் இனவாத மதவாத திட்டமிட்ட நடவடிக்கைகளையும் இது பொன்ற மக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறாக இருக்கம் படை முகாம்கள் குறித்தும் கவலை கொள்ளப்போவதில்லை.

மக்கள் தமக்காக போராடினால் தான் வாழ்வு என்ற நிலை இன்று. மகிந்த அரசால் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய காலமிது.