25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"சிறிலங்காப் படைகளால் தேடப்பட்டு வந்த கோபி அப்பன் தேவிகன் ஆகிய மூவரும் நெடுங்கேணிப் பகுதியில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நெடுங்கேணி வெடிவைத்தகல்லுப் பகுதி காட்டுப் பகுதியை அண்டிய வீடொன்றைச் சுற்றி வளைத்த  போது இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும்இ அப்போது இடம்பெற்ற மோதலில் கோபி எனப்படும் செல்வநாயகம் கஜீபன் தேவிகன் எனப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் அப்பன் எனப்படும் நவரத்தினம் நவநீதன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது".

மூவருக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் வீராப்பு கொள்கின்றது. செய்யப்பட்டது... கோழைகள் போல் என்கவுண்டர் பாணியிலான மனித உரிமைகளை மீறிய கொலைகளே.!….. வெட்கப்பட வேண்டியதொரு விடயத்திறகு; பெருமை கொள்வது அநாகரீகத்தின் பேடித்தனத் செயற்பாடாகத் தெரியவில்லை.