25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை: பா.ஜ.க அறிவிப்பு!

இக்கட்சியின் குளறுபடிகள் நிறைந்நத தேர்தல் காலப்பரப்புரைகளில் "தமிழ்ஈழ" அறிவிப்பு முன்மாதிரியானது. தமிழ்ஈழக் கனவில் இருந்து பாரதிய ஜனதாவை வில்லாக வளைத்து தமிழ்ஈழ நாண் பூட்டி, இதோ தன் தோழில் போட்டுவிட்டேன் பாருங்கள் என்ற வை.கோ.வின் பாமரக் கணிப்பிற்கு விழுந்த இடி இது. 21-ம் நூற்றாண்டிலும் அரசியலை பாமரம் கொண்டு சிந்திப்பதை விடுத்து, குறைந்தது "அண்ணாவின் அறிவு" கொண்டாவது சிந்திப்பார்களா? இந்த தம்பிகளும், "ஐயா" நெடுமாறன் போன்றவர்களும்!…

அழகிரிக்கு வந்த மவுசு!

தி.மு.க.இவில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அழகிரியை மதுரையில் ம.தி.மு.க. தலைவர் வைகோ திடீரென்று சந்தித்து 45 நிமிடம் பேசியுள்ளார். இந்த சந்திப்பால் தென் மாவட்டங்களில் ம.தி.மு.க. போட்டியிடும் விருதுநகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தி.மு.க.இவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அழகிரியை சும்மா தமாஜாக நிறுத்தி, தன்னை முன்னிறுத்த முனைந்த ஸ்டாலின் நடவடிக்கையால் தந்தை தசரதனுக்கு பெரும் கவலையாம். புத்திர சோகத்தால் அல்ல. அழகிரியின் அண்மைக்கால அனர்த்தன வெள்வெருட்டுக்களால்…. எட வை.கோவையும் இவன் சந்தித்துட்டானே எனும் பெரு வெறுப்பில் இருந்துமாம்.!

மக்கள் ஆவேசத்தால், அ.தி.மு.க.இ வேட்பாளர் விரட்டியடிப்பு:

"அடிப்படை வசதி ஏதுமில்லை. ஓட்டு கேட்க தேர்தலுக்கு மட்டும் தான் மக்களை தேடி வருவீர்களா? அடிப்படை வசதி ஏதும் செய்து தராத அ.தி.மு.க.வுக்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம். இனிமேல் இப்பக்கமே வராதீர்கள்" எனக்கூறி தஞ்சையில் மயிலாடுதுறை அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு விரட்டியடித்தனர்!

நடைபெறும் ஏமாற்று திருவிழாவிற்கு மக்கள் சன்னதம் கொண்டு வழங்கிய விரட்டல் பூஜைதான் இது. தேர்தலின் பின்பும் இப்பூஜைகள் தொடருமானால் ஏமாற்றுக் கடவுள்கள் இல்லாதாக்கப்படுவார்கள்.

"சிறிலங்காவில் ஜனநாயகம் நிலவிய ஒரு காலம் இருந்தது": முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி!

உண்மைதான் இலங்கையில் ஓருகாலத்திலாவது ஜனநாயகம் இருந்தது. ஆனால் உங்கள் அமெரிக்க ஜனநாயகம் எப்போதிலிருந்து இல்லாமல் போனதென உஙகளால் பாதிக்கப்பட்ட நாடுகளும்-மக்களும் கேட்டால் அக்கேள்விக்கென்ன பதில்? முதலாளித்துவமாகியதில் இருந்து உள்நாட்டிலும், ஏகாதிபத்தியமாகியதில் உலகெங்கும் இல்லையென சொல்லலாமோ? சொல்லி ஐ.நா.சபையில் பிரேரணை வந்தால் நீங்கள் வீட்டோவைத்தானே ஜனநாயகமாக்குவீர்கள். இதுகொண்டுதானே உங்கள் ஜனநாயகம் உலகில் உயிர் வாழ்கின்றது.

விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்: மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

இதேவேளை விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களை சந்தித்த மலேசியப் பிரதமர் கிடைக்கப்பெறுகின்ற புதிய தகவல்களின் படி மேற்படி விமானம் இந்துமா சமுத்திரத்தின் தென்பகுதியில் காணமல் போயுள்ளது என்பதை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

சம காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று; அந்த மர்மத்துக்கு விடைகாணமுடியுமா? எனும் கேள்வியோடு… துயருறும் துயர் உலகோடு நாமும் எம் துயரையும் பகிர்வோம். துக்கத்தை பலமாக மாற்றுவோம்.