25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் கருணாநிதிதான் காமடி அரசியல்வாதியென்றால், வை.கோ. பலபடிகள் மேல் சென்று காமடியிலும் காமடியாகியுள்ளார். இலங்கைத் தமிழ்மக்களின் அவல அரசியலை வைத்து பிழைப்பு நடாத்தும் கூத்தாடிகளின் கூடாரகியுள்ளது தமிழகம். அதுவும் தேர்தல் என்று வந்துவிட்டதால், கோமாளிகளிலும் கோமாளிகளான கோமாளிகளின் கோட்டமாகியுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் எடுத்த நிலையை கடைபிடிக்க மோடியிடம் கோரினேன். மோடி நேர்மையானவர், நியாயமானவர், தன்னலமற்றவர், மதுவிலக்கை அமூல்படுத்தியவர். மத்தியில் ஊழல் இல்லாத அரசை மக்கள் எதிர்பார்க்கின்றனர் அதை மோடி தருவாராம்.

இவர் இப்படியென்றால் பகுத்தறிவாளனின் கடமை-கண்ணியம-கட்டுப்பாட்டை உடைக்க வைத்து, தம் இந்துவ வழிபாட்டிற்கு கொண்டுவந்த இல-கணேசன் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ. ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இலங்கை விவகாரத்தை சரியான முறையில் கையாண்டது. .....அதேபோல அண்டை நாடுகளிடம் கடன் வாங்கியதில்லை. மற்ற நாடுகளுக்கு கடன் கொடுத்திருக்கிறோம்.இ …………….

தேவையேற்பட்டால் இலங்கைத் தமிழரின் தமிழ்ஈழத்திற்காக ஐ.நா.சபைக்கல்ல, தரணியெங்கும் போய்வருவேன். நான் பங்காளியாகும் அரசு அமைந்தால் கச்சதீவை மீண்டும் தமிழகத்தின் பகுதியாக்குவேன். அம்மா உணவகம், மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம், விலையில்லா மின்விசிறி மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.! -----அம்மா

திருப்போரூர்:காஞ்சிபுரம் தொகுதியில் ராகு காலம் முடிந்த பிறகு தி.மு.க. பொருளாளர் தேர்தல் பிரசாரத்தை துவக்கினா! இலங்கைத் தமிழரின் துயர் தடைக்க டெசாவின் துணை கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கும் போனவன் நான், "ஆட்சியிலிருந்தால் கோட்டை இல்லாவிட்டால் கோடநாடு" ராகு காலம் முடிந்த பின் கொந்தளித்த ஸ்டாலின்

1998ல்இ பா.ஜ.இவைச் சேர்ந்த கல்யாண் சிங் உ.பி. முதல்வர் பதவியிலிருந்து "டிஸ்மிஸ்' செய்யப்பட்ட பின் மூன்று நாட்கள் மட்டும் முதல்வராக பதவி வகித்தவர் ஜெகதாம்பிகா பால். நேற்று இவர் காங். கட்சியில் இருந்து விலகி ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி பா.ஜ.வில் நேற்று சேர்ந்தார்.!

சரி இப்படித்தான் தமிழகத்தின் தேர்தல்களம் கோமாளித்தனங்களால் ஆகியுள்ளதென்றால், வை.கோ.விற்கு மகிந்தாவின் சதியாம். இவருக்கு சதி செய்ய விருதுநகர் தொகுதி மக்கள் மகிந்தாவின் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களா? இரத்தத்தின் இரத்தங்களா? அல்லது தொப்புள்கொடி உறவுகளா? தேர்தலுக்கு இப்படியொரு மூடம் கொண்ட பகுத்தறிவா?

மகிந்தாவிற்கு இப்போ வெள்ளிதிசைப் புத்தியில் புகழ்ஸ்தானம் உச்சத்தில் உள்ளது. மகிந்தப் புகழ் ஜெனீவா முதல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொடி கட்டிப்ப பறக்கின்றது. நவநீதம்பிள்ளை முதல் கமருன், ஒபமா வரை புகழ்ப் பரப்பரையாற்றுகின்றார்கள். இதில் வை.கோவும் மகிந்த-சதிக் கீர்த்தனை பாடுகின்றார்.

-அகிலன்

20/03/2014