25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈ.பி.டி.பி.யின் தீவக அமைப்பாளரான கமலேந்திரனிடம் இருந்தது அவரது தனிப்பட்ட துப்பாக்கி. அதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை. அவரது உதவியாளரிடம் இருந்ததும் அவரது தனிப்பட்ட துப்பாக்கி. இப்போது துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வது இலங்கையினில் சாதாரண விடயம்.ஆவா குழுவிடம் கூட கைக்குண்டுகள் இருந்திருக்கின்றன. கொழும்பினில் துமிந்த சில்வாவிற்கும் பிரேமச்சந்திராவிற்குமிடையே துப்பாக்கி சூடு நடந்த வேளை ஒருவருமே ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆயுதங்கள் உள்ளதாகவோ ஆயுத கலாச்சாரம் இருப்பதாகவோ பேசவில்லை. ஆனால் ஈபிடிபியின் ஒரு சிலநபர்களிடம் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் எமது கட்சிக்கு சேறடிக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ்.ஊடக அமையத்தில் இன்று  காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே கமலேந்திரனால் படுகொலையான நெடுந்தீவு பிரதேச சபை தலைவரது சகோதரியும் முக்கிய சாட்சியுமான பெண்ணொருவரிற்கு ஈபிடிபியினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தமது கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்ட ஒருவரிற்காக கொலை மிரட்டல் விடுக்க வேண்டிய தேவையில்லையென தெரிவித்ததுடன் தமது கட்சி பெயரினில் எவராவது இவ்வாறாக செயற்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளினை எடுக்க பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

-நன்றி : லங்கா வியூஸ்