25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altமாகாணசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண மாவட்டங்களில் கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடாத்த முன்னிலை சோஸலிஸக் கட்சி தீர்மானித்துள்ளது. 

 முதலாளித்துவ தேர்தல் முறைமையின் உண்மையான சுயரூபத்தை தோலுரித்துக்காட்டும் அதேவேளை தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டிய பக்கம் தொடர்பா தெளிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக தொரியவருகிறது.

இவ் வேலைத் திட்டமானது மேல் மற்றும் தென்மாகாண மாவட்டங்களின் பிரதான நகரங்களான கொழும்பு கம்பஹா களுத்துறை காலி மாத்தறை அம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் கருத்தரங்குகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னிலை சோஸலிஸக் கட்சி தெரிவிக்கிறது.

இதன் முதற்கட்டமாக மார்ச் 03ஆம் திகதி மாலை 03மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக சிறு சிறு கூட்டங்களும் வீட்டுக்கு வீடு மக்கள் சந்திப்புகளை நடாத்தவும் முன்னிலை சோஸலிஸக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.