25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மெல் குணசேகர இலங்கையின் முன்னணி பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகர குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

மெல் குணசேகரவின் சடலம் கூரிய ஆயுதமொன்றால் குத்தப்பட்ட காயங்களுடன் கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்காலத்தில் ஏஎஃப்பி செய்திச் சேவைக்காக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பிலிருந்து பணியாற்றினார்.

ஊடகத் தொழில் காரணமாகத் தான் அவர் கொல்லப்பட்டாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைகள் எதற்கும் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இலங்கை அரசாங்கத்தின் மீதுள்ளன.