25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவீஸ்சில் மிகப் பெரிய நகரான சூரிச்சில் இலங்கை அரசின் ஐனநாயக விரோதப் போக்கை கண்டித்து துண்டுப்பிரசுரமும் பிரச்சாரமும்!

மார்கழி 14-12-2013 அன்று சுமார் மூன்று மணியளவில் முன்னிலை சோசலிசகட்சி தோழர்கள் தமிழ்பேசும் மக்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்று கூடினர். லலித் மற்றும் குகனை விடுதலை செய்! கடத்தல்கள் - படுகொலைகளை எதிர்ப்போம்! என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரத்தையும் போராட்டம் பத்திரிகையையும் வினியோகித்தனர். பலர் எந்த மறுப்பும்மில்லாமல் வாங்கிப்படித்தனர். சிலர் மேலதிகமாகவும் முன்னில சோசலிச கட்சியின் தமிழ் பேசும் தோழர்களுடன் உரையாடினர்.

என்றாலும் அம்மக்களிடம் ஓருவித அச்சநிலையின் சிறு பொறி காணப்பட்டதை அத்தோழர்கள் கண்டுகொண்டார்கள். இதற்கான காரணம் தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்க வரலாற்றில் காணப்பட்ட விமர்சனப்பகிர்வை ஏற்றுக்கொள்ளாப்போக்கும். ஆதன் உச்சமாக வெடித்த இயக்கங்களுக்கிடையிலான வன்முறையும் காரணமாக இருக்கலாம். அல்லது இவர்கள் டொச் மொழியில் உரையாடியபடியே தம்மிடம் தமிழிலான துண்டுப்பிரசுரத்தை வினியோகிக்கிறார்கள். தமக்குள் சிங்களத்தில் உரையாடுகிறார்கள் என்ற குழப்பத்தில் ஏற்பட்ட ஒருவித அச்ச நிலையாகவும் இருக்கலாம்.

என்னதான் இருந்தாலும் அம்மக்களது அச்ச நிலையில் நியாயமான காரணம் தெரிகிறது. ஆக்காரணங்களைத் தோற்றவித்த ஐனநாயக விரோத அரசியற் போக்ககளும். இனமுரண்பாட்டை தூண்டி சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுத்தும், இன அழிப்புக்களைச் செய்த ஆட்சியாளர்களும், ஒடுக்கப்படும் இனம்சார்ந்து இனமுரண்பாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளும் இன்னும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை சரியான அரசியல் வழிகாட்டல் மூலமே அகற்ற முடியும் என்பதை இடதசாரி அரசியல் தத்துவத்தின் வழிகாட்டலில் பயணித்தக் கொண்டிருக்கும் முன்னிலை சோசலிச கட்சி தோழர்களும், மற்றும் இடதுசாரிகளும் புரிந்து கொண்டவர்களே ஆவர்.

இன்நிகழ்வு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இடம் பெற்றது. இன்நிகழ்விற்க எதிரான எதிர்ப்புரட்சி புனைவுக் கருத்துக்களை எவராவது தமது சுயநல அரசியல் நலன் சார்ந்து தோற்றுவித்து விடலாம். ஆனாலும் முன்னிலை சோசலிச கட்சித் தோழர்கள் இவ்வாறான இணைந்த அரசியற் செயற்பாட்டிற்கான நிகழ்வுகளை பலவடிவங்களில் மென் மேலும் நடத்தவும், இலங்கை முதலாளித்துவ அரசியலின் கொடுமையை மாக்ஸ்சிய லெனிசிய வழிகாட்டலில் தோற்கடிக்கவும் உறுதி பூண்டவர்களாக அன்நிகழ்வை முடித்துக் கொண்டனர்.

ஆம் நாங்கள் ஒன்றாக குரலெழுப்புவோம்!

லலித் மற்றும் குகனை உடன் விடுதலைசெய்!

கடத்தல்-படுகொலைகளை எதிர்ப்போம்!

காணாமல் போனவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் உடன்வெளியிடு!

அனைத்து இனவாதங்களுக்கும் எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்மைக்காக ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் மீது நம்பிக்கை வைப்போம்!

நேரடித் தொகுப்பு

திலக்