25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லை தியத்த உயன பூங்காவில் “புத்தி பிரபோதினி” எனும் புகைப்படக் கண்காட்சியை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 10.12.2013 அன்று திறந்துவைத்தார்.

அதில் கிளிநொச்சி விட்டுத்திட்டத்துக்கான காட்சிப் படம், வன்னி மக்களை அவர்களின் சொந்த மண் மற்றும் அது சார்ந்த உழைப்பில் இருந்து அகற்றுவதை எடுத்துக் காட்டியது. (பார்க்க படத்தை) 200 வருடமாக லயன் கம்பரங்களில் மலையக மக்கள் வாழந்த படி, எப்படி தோட்டக் கூலிகளாக வாழ்கின்றனரோ அதை வன்னியில் உருவாக்க முனைகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அரசின் வீட்டுத்திட்டம், வன்னி மக்களின் சொந்த நிலத்தில் அல்ல. மாறாக புதிய குடியேற்றம் மூலம் நவதாரளமயமாதலுக்கு எற்ற பண்ணைகளை அமைக்க, நில ஆக்கிரமிப்புத் திட்டமே இந்த வீட்டுத்திட்டமாகும்.

மக்களை தொடர் விட்டுத் திட்டத்தில் குடியேற்றுவதன் மூலம், சொந்த மண்ணில் இருந்து வெகு தூரத்திற்கு முதலில் அகற்றுவதன் மூலம், நிலத்தை கையகப்படுத்தி பாரிய பண்ணைகளாக வன்னியை மாற்ற முனைகின்றனர்.

இந்த வீட்டுத்திட்டதில் இருந்து தோட்டக்கூலிகளாக மாற்றுகின்ற செயற்பாட்டையே, மனிதவுரிமையாக பிரகடனம் செய்து காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.          

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மனித உரிமைகளுக்கான இளைஞர்கள் மன்றம் மற்றும் உரிமைக்கான பாதை அமைப்பு என்பன இணைந்து, மக்களை அவாகளின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அகற்றும் மனிதவிரோத திட்டத்தை கோத்தபாய ராஜபக்ச தலைமையில் காட்சியாக்கியுள்ளனர்.