25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல் 16.12.2013ம் அன்று “கோ. நடேசய்யரின் வாழ்வும் தொழிற்சங்க அரசியலும்” என்ற தலைப்பில் இடம்பெற்றது. கஹவத்தையில் அமைந்துள்ள விடியல் கல்வியகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஆசிரியர் செ.செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டத்தரணி இ.தம்பையா குறித்த தலைப்பில் கருத்துரையை வழங்கினார்.

அக்கருத்துரையானது கோ.நடேசய்யர் தொடர்பாக உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு அவரின் சமூகப்பணி, தொழிற்சங்கப் பணி, அரசியல் கருத்தியல் மற்றும் மலையக தொழிற்சங்க அரசியலில் அவரின் பங்கு என்பவற்றை விமர்சனப்பாங்கில் கோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தது. கருத்துரையின் பின்னர் பங்குபற்றியவர்கள் தமது கருத்துக்களை ஆர்வத்துடன் முன்வைத்தனர். நிகழ்வில் பாடசாலை மாணவர்களினால் மக்கள் பாடல்கள் பாடப்பட்டன.