25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

''லலித் - குகனை விடுதலை செய்! என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சுவிஸ் உறுப்பினர்களால் சூரிச் நகரை அண்டிய பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்துண்டுப் பிரசுரம் சிங்களம், தமிழ் மற்றும் ஜர்மன் மொழியில் அச்சிடப்பட்டிருந்ததோடு, அதன் தொனிப்பொருளுக்குள்,

ஆம்! நாங்கள் ஒன்று சேருவோம்! இந்த அழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

லலித் மற்றும் குகனை உடனே விடுதலை செய்!

கடத்தல்களையும் கொலைகளையும் எதிர்ப்போம்!

காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை உடனடியா வௌியிடு!

அனைத்து இனவாதங்களுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் மீது நம்பிக்கை வைப்போம்! " போன்ற கோஷங்கள் உள்ளடங்கப்பட்டிருந்தன.

இதிலுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சிங்களவர் , தமிழர் என்ற பேதமின்றி துண்டுப் பிரசுரத்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியமைதான்.