25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஞாயிறு லண்டனில் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் கார்த்திகை வீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான முன்னிலை சோசலிச கட்சியின் அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பலர் உரையாற்றியதுடன்  மறைந்த தமது தோழர்களின் தன்னலமற்ற மக்களின் விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களை நினைவு கூர்ந்தனர். இலங்கையிலிருந்து ஸ்கைப்பின் ஊடாக கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர் தோழர் அஜத் குமார நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார்.

 தனதுரையில் இந்த நிகழ்வு ஒரு சடங்காக கொண்டாடப்படக் கூடாது என்றும் இந்நாளில் தமது கடந்த கால செயற்பாட்டின் பின்னடைவுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கி புதிய வேலைத்திட்டத்துடன் அனைத்து இனங்களையும் சேர்ந்த ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையினை முன்னெடுப்பதே இந்த வீரர்களுக்கு நாம் அளிக்கின்ற மரியாதையாக இருக்கும் என பேசியிருந்தார்.