25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"1972 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவம் வடக்கு அயர்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களில், 13 பொதுமக்களை சுட்டுக் கொலை செய்தனர். (Bloody Sunday) இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து ராணுவத்தில் தான் குற்றம் என அறிக்கை வெளியிட 40 வருடங்கள் எடுத்தது."

"கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்தனர். நாம் அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். 30 ஆண்டுகளுக்கு ஒரு விசாரணை வேண்டும். இதனை விசாரணை செய்ய எங்களிற்கு நிரம்ப காலமாகும்" என இற்றைய பொதுநலவாய அமைப்புக் கூட்டத்தில் பிரித்தானிய பிரதமர் கமருனுக்கு பதிலளிக்குமுககமாக மகிந்த ராஜபக்ஸ பேசியுள்ளார்.

மகிந்தா உள்நாட்டில் இனவெறியன் கொலையாளி என்றால் கமருன் அகில உலக கொலையாளி. ஆப்கான் முதல் சிரியா வரை ஆயுதங்களை விற்பனை செய்தும், நாடுகளை ஆக்கிரமித்தும், மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்வதிலும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதிலும் வின்னர்.

இங்கு பிரச்சினை மேற்குலகத்தின் தெற்காசிய பிராந்திய ராணுவ நலன்களிற்கு இடையூறாக மகிந்தா சீனாவிற்கு பல ராணுவ முக்கியத்துவம் சார்ந்த இலங்கையை தங்குதடையின்றி திறங்து விட்டுள்ளமையே.

உலகம் முழுவதும் அப்பாவி பொது மக்களை வகை தொகையின்றி கொலை செய்யும் மேற்குலககும் கமருனும் தமிழ் மக்களின் மேல் அக்கறைப்பட மேலுள்ள விடயமே முக்கிய காரணம். சோளியன் குடும்பி சும்மா ஆடாது.

எம்மை மீட்க நாம் தான் வீதிக்கு வந்தாக வேண்டும். இந்த அரசால் தமிழ் மக்களுடன் முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள் ஒடுக்கி அடக்கப்படுகிறார்கள். அடக்கி ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடுவதே எம்முன்னால் உள்ள ஓரெ ஒரு வழி அதுவல்லாத எதுவும் எம்மை பலியாடுகளாக்கும்.