25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altகாலி, போகஹகொட பகுதியில் மேலும் ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகொட சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்புக் கமிட்டியின் முக்கிய செயற்பாட்டாளரான நுவன் சமீர என்பவரே நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டவராவார்.

வீட்டில் ஆயுதம் வைத்திருந்ததாக  சமீபத்தில் கைது செய்யப்பட்ட நோபட் சில்வா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது நகைப்பிற்கிடமாக இருப்பதாகவும், மக்களின் சுகாதாரத்திற்கும் சூழலிற்கும் அழிவை ஏற்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவென பிரதேச மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.