25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாதாரணமாகநம்நாட்டு "அரசியல் கொடைவளத்தில்" இனவாதங்களின் பாற்படாததொன்று இல்லையென்றே சொல்லலாம். இவ்வளத்தில் தேர்தல் என வந்துவிட்டால் அது "டபுள் புறமோசன்" ஆகிவிடும்.

தற்போது தமிழர் கூட்டமைப்பினர், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தேர்தல் சந்தையில் இனவாதத்தை தாராள மயமாக்கியுள்ளார்கள். உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ்ஈழக் கனவில் இருந்து புனையப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இருப்பதை காப்போம் என்பதை மெருவலாக சொல்லியுள்ளனர். இதில் இழந்ததைப் பெறுவோம் எனும் உச்சாடனம் என்பது, இழந்த உரிமைகளைப் பெறுவது என்பது அல்ல மாறாக "நாம் ஆண்ட பரம்பரை இப்பவும் ஆள நினைப்பதில் என்ன குறை" எனும் தமிழ்ஈழ இட்டுக்கட்டல்களை தன்னகத்துள் கொண்டதுதான் இவ்விஞ்ஞாபனம்.

கூட்டமைப்பு கடந்த பாராளுமன்ற-ஜனாதிபதித் தேர்தல்களில் புலிகளின் ஆதரவாள அணியினை (குமார் பொன்னம்பல கஜேந்திரன் குழுவுடனான சகலரையும) இல்லாதாக்கியே தேர்தலில் நின்றது.

ஏனென வினவியதற்கு நாம் எப்போதும் புலிகளை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர் என சாட்சிக்கு சிங்கக்கொடியையும் தூக்கிக் காட்டினார் சம்பந்தர். இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் புலி என்மேலும் பாய்வதற்காக பதுங்கியது, அது பாய்வதற்கு இடையில் நான் பாய்ந்து விட்டேன் எனவும் சொல்லிக்கொண்டுதான் திரிகிறார்.

ஆனால் பிரபாகர பூமியான வல்வெட்டித்துறைக்கு சென்றவுடன் என்னதான் சொல்லியுள்ளார்கள். பிரபாகரன் என்றால் பயங்கரவாதியல்ல, அவர் விடுதலைப் போராளியென மகிந்தாவிற்கும் தெரியுமென்கிறார்கள்.

இதெல்லாம் தேர்தல்கால சமாச்சாரங்கள் தானே தென்னிலங்கை இனவாதங்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளுமா? என தீக்கோழியின் நினைப்பில் உளறுகின்றார்கள்.

ஆனால் மகிந்தாவால் நடமாட விடப்பட்டுள்ள பொதுபலசேனா போன்ற "வானர அனுமான்கள்" கைகளில் தீயிடப்படாத "இனவாத" நெய்ப் பந்தங்களுடன் அல்லவா திரிகின்றன. "சம்பந்தனை கைது செய்து சிறையில் அடை" இல்லையேல் நாட்டில் இனவாதத் தீ மூட்டுவோம் என.

சம்பந்தனோ நான் என்ன சொல்லி விட்டேன்? நீ ஏன் குழம்புகின்றாய்? நான் சொன்னதெல்லாம் உன் சம்மதம் கொண்ட ஐக்கிய இலங்கைக்குளதானே... விளங்காட்டி மகிந்த சிந்தனையாளரிடம் கேளென மடக்கி பிரக்கிராசி வாதம் புரிகின்றார்.

நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் சந்தையில் இனவாதப் புளக்கம் நவ தாராள வாதமாகியுள்ளது. சந்தையில் உங்கள் கீரைக்கடைக்கு சரியான எதிர்க்கடை இல்லையென்பதால், மக்கள் உங்கள் கடைக்குள்…..!

-அகிலன்

8/9/2013