25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தின் 66ஆவது படைப் பிரிவினர் பூநகரி பழைய மருத்துவக் கட்டிடத்தைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான 12காணித்துண்டுகளை சுவீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட காணி அலுவலர்,பூநகரி காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர், கிராம சேவையாளர் ஆகியோர் அண்மையில் சுவீகரிக்கவுள்ள காணிகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினர்.

 இதற்கமைய இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 -lankaviews