25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகர், பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மகிந்த அரசால் படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவர்.

லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துணிச்சலுடன் முன்வந்து இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ்.

2009- முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுற்ற நிலையில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்ட கொலை வெறிச் செய்தியை, (சரத்பொன்சேகாவை வரவழைத்து, அவரைப் பேட்டி கண்டு அதை சண்டே லீடர் பத்திரிகையில் வெளியிடடு) உலகறியச் செய்ததில் பிரெட்ரிக்காவுக்கு பெரும் பங்குண்டு.

பின்பு அந்தப் பேட்டியை சரத் பொன்சேகா மறுத்ததும், அப்பேட்டி கொண்டே சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் தேசத்துரோக வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறைக்கும் அனுப்பப்பட்டார்.

மேலும் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமாவின் செல்லநாயை சுவிசுக்கு அனுப்ப பிரத்யேக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து பிரெட்ரிக்கா எழுதிய கட்டுரை அவருக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

அதனையடுத்து அரச பாஸிஸ்ட்டுக்களான அண்ணன் தம்பிகளின் கொலைப்பார்வை இவர் மீதும் திரும்பியது. இதில் அவர் தனது பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இன்றும் என்னாட்சியில் பத்திரிகைச் சுதந்திரமும், பத்திரிகையாளர்கள் பத்திரமாகவும்தான் உள்ளார்கள் என் மகிந்தா சாத்தான் வேதம் ஓதுகின்றார். இதற்கு ஏற்றால்போல் அவரின் மந்திரிகள் பிரதானிகள், அரச ஏவல் எடுபிடிகள் எல்லாம் ஒத்து ஊதுகின்றன.

இதில்காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாக மகிந்த மந்திரியார் ஒருவர் அதிர்ச்சி செய்தியாக்கியுள்ளார். இது இளவரசன் கொலையில் பா.மா.கா. சொல்லும் செய்திபோல் இல்லை?....