25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

alt தெரண தொலைக்காட்சி சேவையின் அறிவிப்பாளரான தில்கா சமன்மலீ என்பவர் பொது பல சேனை  அமைப்பினால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக் கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 

சமீபத்தில் தெரண தொலைக்காட்சி சேவையிலி ஒலிபரப்பப்பட்ட 360 என்ற நிகழ்ச்சியில் பொது பல சேனை அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானதேரர் கலந்து கொண்டிருந்த வேளையில், தில்கா சமன்மலியால் கேற்கப்பட்ட கேள்வியொன்றுதான் இந்த மரண அச்சுறுத்தலுக்கு காரணமென கூறப்படுகிறது. கலபொட அத்தே ஞானசார தேரர் அதிக குடிபோதையில் வாகனத்தை செலுத்தி ஒரு நபரை மோதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்டப்பணம் செலுத்தியமை தொடர்பாக கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற ஞானசார தேரர், மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டபோது 'நாங்கள் அடுத்த கேள்விக்கு செல்வோம்" என்றார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தமக்கு எதிராக இணையத்களங்களின் ஊடாக அவதூறு செய்யப்படுவதாகவும், மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.