25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டக்ளஸ் தேவானாந்தா கடந்தவாரம் வீரகேசரிப் பத்திரிகைக்கு பத்துப் பெரும் கேள்விகளுக்கு பதில் எழுதி "பாஸ் பண்ணின புளகாங்கித்த்தில" சில அரச அடியாட்களும், அவர்களின் ஊடகங்களும் அமளி-துமளியாக செய்திகள் எழுதி துள்ளிக் குதிக்கின்றன. பார்த்தியா அவரின் கேள்விகளுக்கான பத்திரமான பதில்களை என பரவசமடைகின்றார்கள்.

"வடக்கு மாகாணசபை தேர்தல் முதலமைச்சர் வேட்பாளர் என்பன எனது நீண்ட நாள் கனவு. மாகாணசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவது என்பது மட்டும் வெற்றியல்ல. தேர்தல் வெற்றியின் மூலம் பெறுகின்றதை பாதுகாத்துக்கொண்டு, இதுவரை நாம் எமது மக்களுக்காக கட்டி காத்து வந்த ஆக்க பூர்வ இணக்க அரசியலை பாதுகாத்துக்கொண்டே எந்த முடிவுகளையும் எடுப்போம்!"

"தமிழ் பேசும் மக்களை ஆள வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. மாறாக எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கொள்கையே எனக்குண்டு."

"13 வது திருத்தச்சட்டம் என்பது நாம் சும்மா இருந்து பெற்ற வரம் அல்ல. நாம் அனைவரும் போராடிப்பெற்ற உரிமை. எமது ஆரம்பகால உரிமைப் போராட்டத்தில் நாம் பெற்றுக்கொண்டது இது மட்டுமே. அனாலும் அது குரங்கின் கை பூ மாலையாகவும் ஏற்கனவே நான் சொன்னது போல் பன்றிக்கு முன்பாக போடப்பட்ட முத்தாகவும் போனதே துயரம். சகலராலும் கைவிடப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் மட்டுமே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாதாடியும் போராடியும் வந்திருக்கிறோம்."

மேற்சொன்னவைகளை பத்துப் பெரும் கேள்விகளுக்கான, டக்ளஸின் சாரம் கொண்ட பதில்களாக கொள்ளலாம். இவைகள் யாவும் வடமாகாணசபைத் தேர்தலின் "பட்டுவேட்டிக்" கனவில் இருந்து (மாகாண முதல்வர்) பலவற்றைப் பசப்பிய பதில்கள் ஆகும். விளைவு கோமணமும் இல்லாமல் போகும் என்பது அவருக்கும் தெரியும்.

மேலும் டக்ளஸ் இலங்கை அரசியலின்…. "அரசியல் வனாந்திரத்தில் தான் வாழ்கின்றார்" என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 20-வருடங்களுக்கு மேலாக வாதாடியும், போராடியும் வந்த "பதின்மூன்று" இன்று பேரினவாதிகளின் கைகளுக்குள் சிக்குண்டு (குரங்கின் கை பூ மாலையாகவும் பன்றிக்கு முன்பாக போடப்பட்ட முத்தாகவும்) படும் பாட்டின் உண்மைத்தன்மையை விளங்கிக்கொண்டுதான் அரசியலில் பதில் அளிக்கின்றாரா?

பதின்மூன்றாவதிற்கு பேரினவாதிகள் சவப்பெட்டி செய்கின்றார்கள், அதற்கு மகிந்தா சவக்குழி தோண்டுகின்றார். உங்களைப் போன்றவர்களின் கைகளால் அது அடக்கம் செய்யப்படும். இதைத்தான பதினமூன்றுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களின இன அழிப்பிற்கும் செய்கின்றீர்கள். செய்வீர்கள்!