25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிங்கள வார இதழான 'ஜனரல" பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜீ. டீ. எல். பிரியதர்ஷன அவர்களை மர்ம நபர்கள் நேற்றும் (6) பின் தொடர்ந்ததாகத் தெரிய வருகிறது. கடமை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தன்னை பின் தொடர்ந்ததாக பிரியதர்ஷன கூறினார்.

வீட்டுக்கும் செல்லும் பாதையில் தன்னை அவர்கள் மோட்டார் சைக்கிளில் மாறி மாறி  பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் நிறுவன ரீதியில் செயற்படும் குழவைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமெனவும் கூறிய அவர்,மேற்படி நபர்களிடமிருந்து தப்பி வீட்டை சென்றடைந்ததாகவும் கூறினார்.

கடந்த மே 31ம் திகதி அவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.