25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் மாணவர் போராட்டம் நடந்த வண்ணமுள்ளது. காரணம் , அரசியல் ரீதியாக, இயங்கிய மாணவர்களை பலகைக்கழகத் தலைமை பொய்க் காரணங்களைக் கூறி அம் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மறுத்ததனாலாகும்.

இப்போ, அம்மாணவர்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அனுசரணையுடன், பல்கலைக்கழகத் தலைமையின் முடிவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் கொட்டில்கள் அமைத்து, அங்கிருந்தபடி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் , பிரச்சாரத்தையும் முன்னெடுக்கின்றனர் .

 

மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மறுத்ததற்குப் பின்னணியில் சர்வவல்லமை பொருந்திய மகிந்த ராஜாபக்ஷவின் கட்சியினரும், அவர் அரசியல் அதிகாரத்துக்கு கரசெவகம் செய்யும் அடிவருடிகளும் உள்ளவர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல .

பல வழிகளிலும் மாணவர் போராட்டத்தை நிறுத்த முயற்சித்த அரச யந்திரமானது , CID மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகளுடாக மாணவ தலைமைக்கு எதிராக மிரட்டல்களை விடுத்தது வந்தது. இதன் உச்சக்கட்டமாக நேற்று (23.05.2013), மாணவர்கள் உண்ணா விரதமிருக்கும் கொட்டில்களுக்கு முன்பாக வெள்ளைவானில், ஆயுதங்களுடன் வந்திறங்கிய ராணுவப் புலனாய்வுப் படையினர், மாணவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டியதுடன், மேல் நோக்கி துப்பாக்கிகளால் சுட்டார்கள் .

அதன் பின்பும் கலையாத மாணவர்களின் எதிர்ப்பினால் அவ்விடத்திலிருந்து அகன்றனர் படைப் புலனாய்வுப் பிரிவினர் . இவ்விடயங்கள் தெரிந்திருந்தும் , பல்கலைக்கழகத் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . போராட்டம் தொடர்கிறது. இன்னும் உற்சாகமாக. .