25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று விசாரணைக்காக "ஜனரல" அலுவலகத்திற்கு சற்று முன் வந்தது. கடந்த வார " ஜனரல" பத்திரிகையின் முன்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்த  "தங்க வியாபாரத்தின் பின்னணியில் சீமாட்டி" என்ற செய்தி தொடர்பில் விசாரிப்பதற்காகவே தாம் வந்ததாக பொலிஸார் கூறியதோடு, பத்திரிகையின் ஆசிரியரையும், மேற்படி செய்திக்குப் பொறுப்பான ஊடகவியலாளரையும் நாளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் இன்ற காலை ஜனரல பத்திரிகை அச்சிடப்படும் அச்சகத்திற்கும் சென்று அச்சக உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இவர்களோடு சிவில் உடை தரித்த அதிகாரிகளும் வந்திருந்தனர்.