25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இளைய தலைமுறை தலைமையில் ஹட்டனில் புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கீழே உள்ள கோசங்களை முன்வைத்து இந்த மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1) மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து, சுயநிர்ணய இன சமத்துவ அடிப்படையில் தீர்வு

2) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் வாழ்க்கை செலவுப்படி வருடாந்த சம்பள உயர்வு என்பனவற்றை உள்ளடக்கிய சம்பளத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

3) தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை காணியுரிமை வழங்க வேண்டும்.

4) தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதுடன் மொழி அமுலாக்கம் உரியமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

5) பொருந்தோட்ட தொழிலாளர்கள் மாகணசபை ஏயை உள்ளுர் ஆட்சி நிறுவனங்களுக்குள் கொண்டு வருவதுடன் மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

6) மலையக பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் சம அளவில் அதிகரிக்க வேண்டும்.

7)மலையக மக்களை உள்ளடக்கிய மலையக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும்.