25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

alt“நான் சத்தியமாய் சொல்லுறன், எங்கட காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவியள். வயிறெரிஞ்சு சொல்லுறன்” என்று கூறி மண் அள்ளி வீசித் திட்டிய வயதான தாய் ஒருவர்.

 

வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார்.

மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார்.

“நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன்” என்று அவர் அழுதார்.